பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு லாட்டரி மூலம் வரலாறில் பேசும் அளவுக்கு மாபெரும் ஜாக்பாட் அடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் என்னதான் லாட்டரி டிக்கெட்கள் தடைசெய்ப்பட்டு வந்தாலும் கேரளா போன்ற சில மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை கலைக்கட்டி வருகிறது . அப்படி டிக்கெட்கள் வாங்கிய சிலருக்கு லட்சம் முதல் சில கோடிகள் வரை ஜாக்பாட் அடித்துள்ளது.
அப்படியே இந்தியாவை விட்டு அரபு மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்கு சென்றால் அங்கேயும் லாட்டரி விற்பனை பெருவாரியாக நடைபெறும் ஆனால் அங்கு லாட்டரிகள் பல ஆயிரம் கோடி ஜாக்பாட் அடிக்கும் அளவுக்கு விற்கப்பட்டு வருகிறது.
Also Read : ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடம்..!!
அந்தவகையில் தற்போது பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபருக்கு லாட்டரி மூலம் வரலாறில் பேசும் அளவுக்கு மாபெரும் ஜாக்பாட் அடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரிட்டனில் லாட்டரி டிக்கெட் மூலம் ஒருவர் 1,804 கோடி பரிசு வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு அந்நாட்டின் லாட்டரி வரலாற்றிலேயே 3வது பெரிய ஜாக்பாட் நடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
.
இதற்கு முன்பாக 2022ல் ஒருவர் சுமார் 2,000 கோடியும், மற்றொருவர் 1,840 கோடியும் வென்றுள்ளனர். அந்நாட்டில் இதுவே இந்நாள் வரை மிகப்பெரிய ஜாக்பாட்டாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த லாட்டரி ஜாக்பாட் செய்தி தற்போது இணையத்தில் பெரும் பேச்சு பொருளாக வலம் வரும் நிலையில் பரிசு பெற்றவருக்கு Lifetime Settlement என நெட்டிசங்கள் கருத்து கூறி வருகின்றனர்.