ITamilTv

பிக்பாஸ் வீட்டில் துவங்கிவிட்ட காதல் கிசுகிசுக்கள் ! யார் அந்த காதல் ஜோடி?

Spread the love

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி இன்னும் இரண்டு வாரம் கூட சரியாக முடிவடையாத நிலையில், சில போட்டியாளர்கள் இடையே லவ் (love) டிராக் ஆரம்பித்து விட்டது.

இந்த முறை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். போட்டியாளர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இடையில் உள்ள… கருத்து வேறுபாடுகளும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

அதிலும், இன்று வெளியாகியுள்ள புரோமோவை பார்க்கும் போது.. அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது.

சண்டை, பிரச்சனை, சலசலப்பு என சில போட்டியாளர்கள் மோதிக் கொண்டிருந்தாலும்… சில போட்டியாளர்கள் பெண்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

அதில் மிகவும் முக்கியமான போட்டியாளர் அசல் கோலார்… இவர் குயின்சியின் கையை பிடித்துக்கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார்.

love

மேலும், மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் எல்லை மீறித் தொட்டதாக சமூக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.

அசல் கோலார் மலேசியாவைச் சேர்ந்த மாடலான, நிவாஷினியிடம் கொஞ்சம் ஓவராகவே நெருங்கிப் பழகி வருவதையும் பார்க்க முடிகிறது.

நேற்று முன் தினமே நிவா – அசல் இடையே ஏதோ ஒரு ட்ராக் ஓடுவதைக் கண்டுபிடித்து சில போட்டியாளர்கள் அவர்களை ஓட்டிய நிலையில், இவர்கள் இடையேயான நெருக்கம் நேற்று கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது.

குறிப்பாக நேற்று அசல் நிவாஷினியின் மடியில் தலை வைத்துக் கொண்டு, காதல் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்.

மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாகவே தான் பிக்பாஸ் வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இவர்கள் இடையே காதல் (love) தீ பற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

அதே போல், கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராம் ராமசாமி, குயின்சியை மாமா பொண்ணு எனக் கூப்பிடுவதும், அதற்கு குயின்சி மறுப்பு தெரிவிக்காததும் மற்றுமொரு காதல் ஜோடி உருவாவது போலத்தான் தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்….

 


Spread the love
Exit mobile version