ITamilTv

வசூல் வேட்டையில் லவ் டூடே..படத்தின் வெற்றிக்கு இதான் காரணமா..?

Spread the love

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நான்காம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் லவ் டுடே ( love today ).  இந்த படத்தில் கதாநாயகியாக இவ்வானா நடித்திருந்தார்.மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ்,ராதிகா, யோகி பாபு,ரவீனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தன.

கலகலப்பான கதைக்களத்தில் அமைந்திருந்த இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர்.படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் 15 கோடி வரை லவ் டுடே திரைப்படம் வசூல் செய்துள்ளது.

love today

பல முன்னணி நட்சத்திரங்களுக்கே கிடைக்காத வரவேற்பு அறிமுக நடிகரான பிரதிப் ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் இயக்கிய கோமாளி திரைப்படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதை போன்று தற்போது வெளியாகி உள்ள லவ் டுடே திரைப்படமும் குடும்ப ரசிகர்களை தவிர்த்து உள்ளது இதனால் தற்போது இந்த திரைப்படத்திற்கு வசூல் மழை கொட்டி வருகிறது.

பல கோடி ரூபாய் வசூல் செய்து வரும் லவ் டூடெ திரைப்படம் 2கே கிட்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படம் காதலர்களுக்குள் ஏற்படும் சண்டை குறித்தும் தற்கால மொபைல் போனின் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளது.இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்துள்ளார்.

 


Spread the love
Exit mobile version