திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் (Lover Movie) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதன் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனவர் தான் நடிகர் மணிகண்டன் .
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
அந்தவகையில் தற்போது மணிகண்டனின் துள்ளான் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் தான் LOVER .
அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது .
இதையடுத்து இப்படத்தின் அணைத்து பாடல்களும் ஒவ்வென்றாக வெளியாக திடீரென லவ்வர் படம் தலைவரின் லால் சலாம் படத்துடன் போட்டி போட போவதாக தகவல் வெளியானது.
அதன்படி கடந்த 9 ஆம் தேதி லால் சலாம் படத்துடன் மணிகண்டனின் லவ்வர் படமும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியானது .
ஏற்கனவே குட் நைட் படத்தில் அசத்தலான காதல் நாயகனாக நாம் பார்த்த மணிகண்டனை இந்த படத்தில் ஒரு முரட்டுத்தனமான லவர் பாயாக நாம் பார்க்கலாம்.
காதலில் இதுற்கும் இருவர் காதலுக்காக எண்ணலாம் செய்யலாம் என்னவெனலாம் செய்யக்கூடாது என்பதை இப்படமா தெள்ள தெளிவாக எடுத்து காட்டியுள்ளது.
ஆரம்பம் முதல் தற்போது வரை உழைப்பால் உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வரும் மணிகண்டனுக்கு இந்த படம் வெற்றிப்படமாக நிச்சயம் அமையும் என கூறப்படுகிறது.
Also Read :https://itamiltv.com/issue-of-residential-lease/
இந்நிலையில் Lover Movie வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வெளியான 2 நாட்களில் சுமார் 3 கோடி வரை வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.