வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், மாதவரம், புரசைவாக்கம், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையார், கிண்டி, அரும்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

அதே போல் நேற்றும் திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி உள்ளிட்டட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியிலும், நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே போல் 6-ந் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், 7-ந் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழையும், 8, 9-ந் ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி இரவு அல்லது செப்டம்பர் 6ஆம் தேதி காலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts