நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ( CSK VS LSG ) இன்று நடைபெறும் போட்டியில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற LSG அணி பவுலிங் போட முடிவெடுத்துள்ளது.
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் வெறியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக தொடங்கியது .
பரபரப்பான இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் LSG – CSK ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட உள்ளது . இந்த போட்டி லக்னோவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சென்னை அணிக்கு எதிராக முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.
Also Read : X தளத்திற்கு இடைக்கால தடை! பாகிஸ்தான் அரசின் அதிரடி உத்தரவு..!!!
நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது.
இதேபோல் நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளது,
இந்நிலையில் லக்னோ அணி தனது தாய் மண்ணில் சென்னை அணியை ( CSK VS LSG ) எதிர்கொள்வதால் நிச்சயம் இந்த போட்டி சுவாரஸ்யமாகவும் மிக கடினமாகவும் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை