ITamilTv

தங்களது மகனுக்கு “இந்தியா” என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி…! வைரல் பதிவு..!

Spread the love

தங்களது மகனுக்கு “இந்தியா” (india) என பெயர் சூட்டிய பாகிஸ்தான் (pakistani) தம்பதி.. இணையத்தில் வைரலாகும் பதிவு..

பாகிஸ்தானை சேர்ந்தவர் பிரபல பாடகர் ஓமர் இசா. இவரது மனைவி வங்கதேசத்தை (bangladeshi) பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில், பாடகர் ஓமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையில் அவரது மகன் படுத்து உறங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த நீண்ட பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஓமர் இசா வெளியிட்டுள்ள அந்த பதிவில்,

புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்கள் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை பதிவு;

எங்கள் மகன் இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் அறையிலேயே எங்களுடன் படுக்க வைத்துக் கொண்டோம். மேலும், புதிதாக பெற்றோர்களான எங்களுக்கு எங்கள் மகன் இப்ராஹிமின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது.

மேலும், தற்போது எங்களது மகன் இப்ராஹிம் சிறுவனாக வளர்ந்த பிறகும் கூட எங்கள் அறையிலேயே எங்களுடன் தான் படுத்து உறங்குகிறான்.

அவனுக்கென தனி அறை இருந்தாலும் கூட அவன் எங்களுடன் எங்கள் அறையிலேயே தான் உறங்குகிறான். மேலும், நான் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவன். எனது மனைவி வங்கதேசத்தை பூர்விகமாக கொண்டவர்.

pakistani

இந்த புகைப்படத்தில், எங்களுக்கு நடுவில் உறங்கும் எங்கள் மகனுக்கு நாங்கள் புதிய பெயர் ஒன்றை சூட்டி உள்ளோம்.

பாகிஸ்தானியருக்கும் (pakistani) வங்கதேசத்தை (bangladeshi) சேர்ந்தவருக்கும் நடுவில் என் மகன் படுத்து உறங்குவதால், நாங்கள் அவனை “இந்தியா” (named india) என்று அழைக்கிறோம். இந்தியா எங்களது வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று தனது பதிவில் ஓமர் இசா குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நகைச்சுவையாக இந்த பதிவை எழுதியதாக ஓமர் இசா விளக்கம் விளக்கமளித்துள்ளார்.


Spread the love
Exit mobile version