தனது மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கியதை தடபுடலாக கொண்டாடிய தந்தை..!

மத்திய பிரதேசத்தில் முராரி என்பவர் தன் மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கியதை கொண்டாடுவதற்காக குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்ற நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் சிவபுரியை சேர்ந்த முராரி குஷ்வாஹா, டீ விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் தன் மகளுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கினார். இதை கொண்டாடும் விதமாக ஆட்டம் பாட்டத்துடன் குதிரை மீது ஊர்வலமாக சென்று அந்த போனை வழங்கினார். மேலும் தனது நண்பர்கள் அனைவருக்கு வீட்டில் விருந்தும் வைத்தார்.

இதுகுறித்து முராரி, என் ஐந்து வயது மகள் நீண்ட நாட்களாக ஒரு ஸ்மார்ட் போன் வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவருக்கு அதை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தேன்.

இப்போது தான் ரூ.12,500-க்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன். எனது குடும்பத்தின் முதல் ஸ்மார்ட் போனும் இது தான். இந்த நிகழ்வை ஊர் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காக வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாடியபடி குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்றேன் என கூறினார்.
குதிரை வண்டியில்  ஊர்வலம் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Total
0
Shares
Related Posts