அரசுப் பள்ளி மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்! -நீதிபதிககள்

Madras-High-court-questions-government-school-for-allowing-Private-school
Madras High court questions government school for allowing Private school

அரசுப் பள்ளி மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் பள்ளி என்ற தனியார் பள்ளி அருகில் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தில் உழவர் சந்தை பட்டாசு கடைகள் வைக்கப்படுவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அந்த மைதானத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறி, தனியார் பள்ளியின் ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை காலை 10.மணி முதல் பகல் 1:30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த பகுதி வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்பது குறித்தும், சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியது எப்படி எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பாக 3 வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

Madras-High-court-questions-government-school-for-allowing-Private-school
Madras High court questions government school for allowing Private school

மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 2வது வாரத்திற்கு தள்ளிவைத்ததோடு மேலும், அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும், மைதானத்தை சுற்றி வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Total
0
Shares
Related Posts