ஜீன்ஸ் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக FIDE World Rapid சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரபல செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் அந்த தொடரில் இணைந்து விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜீன்ஸ் உடை அணிந்ததற்காக FIDE World Rapid சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . பிரபல செஸ் வீரரை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இணையத்தில் பல கருத்துக்கள் பல விதமாக எழுந்தன .
Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு..!!
இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், BLITZ தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ள கார்ல்சன், “ஜீன்ஸ் அணிந்து தான் விளையாட போகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
FIDE World Blitz சாம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், தொடரில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இந்த தொடரில் வெற்றி காண்பாரா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.