உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் மகாகும்பத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வரும் நிலையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
மகா கும்ப திருவிழாவில் ஒரு மாதத்திற்குள் பிரயாக்ராஜுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியை எட்டியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, உலகின் 234 நாடுகள் மற்றும் தீவுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை 30 நாட்களுக்குள் மகாகும்ப நகரத்தில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
Also Read : கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது..? – பதில் கேட்கும் அண்ணாமலை
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பம் 2025 இல் இன்று 32வது நாளை எட்டியுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் புதிய வரலாறு படைத்து 50 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. மகாகும்பம் இந்த மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும், இதன் நிறைவுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ளதால் , பக்தர்களின் எண்ணிக்கை மேலும் பல கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த மாபெரும் திருவிழாவில் இதுவரை பல பக்தர்கள் காயமடைந்துள்ளதும் சிலர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.