iphone ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப்பு கட்டிகள் வந்துள்ள சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய கால கட்டத்தில் வீட்டில் இருந்து நாம் ஆர்டர்(online order) செய்தால் உணவு முதற்கொண்டு அனைத்துமே நாம் இருக்கும் தேடி வந்து விடும். மேலும் ஏதேனும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவங்களின் விளம்பரத்திற்காக சலுகைகளும் கிடைக்கும்.
அப்படி அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் iphone ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப்பு கட்டிகள் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள iphone-ஐ ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். நவம்பர் 9ம் தேதி அவருக்கு பார்சல் டெலிவரியாகியுள்ளது.
பின்னர் ஆசையாக அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதில், மூன்று சோப்பு கட்டிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியாகப் பதில் அளிக்காததால் அதிர்ச்சியடைந்த இளைஞர் இது குறித்துக் தானே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.