நாக்பூர் அருகே டீ கொண்டுவர தாமதமானதால் ஆத்திரத்தில் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்தி வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம்(Maharashtra), மவுடா என்ற பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 8 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக ராம்டெக் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தெஜ்ரங் பலாவி என்ற மருத்துவர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு அழைக்கப்பட்ட 8 பெண்களுக்கும் வந்த நிலையில், அவர்களுக்கு ஆபரேஷன் தொடங்கப்பட்டது.
அப்போது 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், மருத்துவர் தெஜ்ரங் பலாவி தனக்கு சோர்வாக இருப்பதால் சூடாக டீ கொண்டுவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் ஊழியர் வராததால்,கோவமடைந்த மருத்துவர் தெஜ்ரங் பலாவி, வேறு மருத்துவரை வைத்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் நிகழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
இதனையடுத்து வேறு மருத்துவர்அறுவை சிகிச்சை மையதிற்கு அனுப்பப்பட்ட நிலையில், மீதம் இருந்த பெண்களுக்கு அந்த மருத்துவர் அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் அளிப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.