தமிழகத்தில் பரம்பொருள் அறக்கட்டளையை நிறுவி பல ஆன்மீக மற்றும் சமூகப்பணிகளை செய்து வரும் மஹாவிஷ்ணு உலகின் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆன்மீகப் பயிற்சி அளிப்பதோடு ஆன்மீக உரைகளும் ஆற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது மொரிஷியஸ் நாட்டில் “ச்செபல்” பகுதியில் உள்ள தேவி பராசக்தி ஆலயத்திற்கு சென்றுள்ள மஹாவிஷ்ணு அங்கு நடந்த யோகா மற்றும் வாழ்வியல் சத்சங்கத்தில் திரளான பக்தர்கள் முன்பு சொற்பொழிவாற்றி இருக்கிறார்.
தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல் தானே என்ற திருமூலரின் திருமந்திரத்தோடு தனது உரையைத் தொடங்கிய மஹாவிஷ்ணு எங்கே நாம் போகிறோம் என்ற தலைப்பில் பல முக்கிய கருத்துகளை எடுத்துரைத்திருக்கிறார்.

நாளை என்ற ஒன்றை உணர முடியாத இந்த வாழ்வில் அறியாமை இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவரே குருவாக இருக்க முடியும்.
அதனால் என்னை குரு என்று கூறிக்கொள்ளமாட்டேன். ஒரு வழிகாட்டியாக மட்டுமே உங்கள் முன் எடுத்துரைக்கிறேன் என கூறியிருக்கிறார்.
மேலும் தர்மத்தின் வழியில் நாம் எப்படி வாழ்வை தொடரவேண்டும் என்பது குறித்து பல ஆழமான கருத்துகளைப் பகிர்ந்த மஹாவிஷ்ணு பகிர்ந்திருக்கிறார்.

இவர் இந்து மக்களுக்காக மட்டும் பி.ஜே.பி கட்சி சார்ந்து செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் இவர் அரபிக் மொழியில் திருக்குரான் வசனம் பேசி மத நல்லிக்கணத்தை பேணும் வகையில் மனிதநேயத்தை வலியுறுத்தியது பெரும் பேசு பொருளாகவும் மக்களால் பாராட்டத்தக்க வகையிலும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்சத்தின் தெய்வீக உயர் நிலைக்கு முன் உண்மையாக சரணடையும் போது வாழ்வில் நிறைவு கிடைப்பதோடு வெற்றிகள் எளிதாகக் கைக்கூடும் எனக்கூறிய மஹாவிஷ்ணு விதி கர்மா முக்தி குறித்த பல கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் அளித்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் மொரிஷியஸ் பராசக்தி ஆலயத்தின் குருக்கள் உமாபதி குருஜி அவர்கள் மஹாவிஷ்ணுவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்து பேசியிருக்கிறார்.
அங்கிருக்கும் முக்கியமான ஆன்மீகத்தலைவர்களையும் மஹாவிஷ்ணு சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.