ஐதராபாத்தில் லிவ்-இன் முறையில் வாழ்ந்துவந்த நிலையில், தனது காதலியை கொடூரமாக கொலை செய்து உடலை ஃப்ரிட்ஜில் (fridge) மறைத்து வைத்திருந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் 48 வயதாகும் சந்திர மோகன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கும் 55 வயதாகும் அனுதாரா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து இருவரும் லிவ்-இன் முறையில் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதற்காக, சந்திரமோகனை, அனுராதா தனது வீட்டின் ஒரு பகுதியில் தங்க வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சந்திரமோகன் அனுராதாவிடம் இருந்து சுமார் 7 லட்ச ரூபாய் வரை பணம் பெற்று உள்ளார்.
அந்த பணத்தை திருப்பி தர கோரி அனுராதா நெருக்கடி கொடுத்தால், அவரை கடந்த 12-ம் தேதி திட்டமிட்டு குத்தி கொலை செய்த சந்திரமோகன், உடலை 6 பாகங்களாக வெட்டி தலையை முசி நதியில் வீசியுள்ளார்.
இந்நிலையில், முசி நதியில் இருந்து அனுராதவின் தலையை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு சந்திர மோகனை கைது செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜில் (fridge) மறைத்து வைத்திருந்த அனுராதாவின் உடல்பாகங்களையும் கைப்பற்றினர். டெல்லி ஷ்ரத்தா வாக்கர் சம்பவத்தைப் போல மற்றுமொரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.