சென்னையில் குருவியாக செயல்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது ( chennai kuruvi ) உறுதியாகி உள்ளதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் இவர்ந்து குஜார்ட் மாநிலத்திற்கு வந்த 4 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் 4 பெரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தவே இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
Also Read : ஆவினில் காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை – கொதிக்கும் வானதி சீனிவாசன்
இதையடுத்து தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் குஜராத்தில் கைதான 4 பேரிடம் விசாரணை நடத்தினர் . இதில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது விசாரணையில் அம்பலமானது.
முகமது நசரத், தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகமது நசரத் அடிக்கடி கொழும்பு சென்று வந்ததால், இந்த விவகாரம் குறித்து ( chennai kuruvi ) இலங்கை விசாரணை அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றனர்.