சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது . இந்திய அணியில் சிறப்பாக விளையாடி ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்திருந்தார்.
Also Read : உடை மாற்றும் அறையில் கேமரா – ராமேஸ்வரத்தில் இருவர் கைது..!!
இதன்மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
2018-ஆம் ஆண்டில் 1291 ரன்களும், 2022-ஆம் ஆண்டில் 1290 ரன்களும் எடுத்து அந்த ஆண்டுகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார் மந்தனா.
இந்த வருடம் 1602 ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் எந்த வீராங்கனையும் ஒரே ஆண்டில் இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.