குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி என்று மணிமேகலை பதிவு ஒன்று வெளியிட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி அவர் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது நீண்ட நாள் காதலரான உசேனைக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் -2 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் வந்தார்.
பிறகு அதே சேனலில் Mr and Mrs சின்னதிரையில் போட்டியாளர்களாகக் களம் இறங்கினர். அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை உசைன் வெற்றி பெறாவிட்டாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி-1 நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலந்து கொண்டார். ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டதால் தனது கணவரின் சொந்த ஊருக்குச் சென்று தனது youtube சேனல் மூலம் அதிகமாக காணொளிகளைப் பதிவிட்டு தனக்கென ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.
தொகுப்பாளர், போட்டியாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், youtube சேனல் சமூக வலைத்தளம் உள்ளிட்டவற்றில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான குக் வித் கோமாளி -4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தற்பொழுது அறிவித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒற்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குக் வித் கோமாளியின் கடைசி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுசின் நானே வருவேன் தோற்றத்தில் இனி நானே வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளேன்.
தொடர்ந்து இரண்டு சீசனன் களுக்கு எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்றும் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளை நான் சிறப்பான பங்களிப்பை அளிக்க நான் கூடுதலாகவே உழைத்திருக்கிறேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் உங்களை மகிழ்வித்து உள்ளேன் என்று நம்புகிறேன்.
அனைவரிடமும் இருந்து பெற்ற அன்பு எதிர்பாராதது நான் என்ன செய்தாலும் அது அன்பை எதிர்பார்க்கிறேன் என்று அந்த பதில் மணிமேகலை தெரிவித்துள்ளார்.மேலும் இவர் அந்த நிகழ்ச்சியில் விலகியதற்க்கு காரணம் என்ன தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.