பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது.பாகுபலியை மிஞ்சும் அளவிற்குப் பொன்னியின் செல்வன் இல்லை என ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் கேட்டபோது”பொன்னியின் செல்வன் என்பது ராஜராஜன் சோழன் பற்றியது அவரைப் பற்றி படம் எடுக்கும் பொழுது அது உண்மையாக இருக்க வேண்டும் நேர்மையாக இருக்க வேண்டும்.
மேலும்,வந்தியதேவன் ஒரு சாமானியனாக இந்த கதையில் வாழ்கிறான், அவன் கண் வழியாகத் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது எதார்த்தமாகத்தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் இருக்கும் பாகு பலி மாதிரி கற்பனை கதையாக இது இருக்க முடியாது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அந்த காலத்துக் கதையைச் எடுத்துச் சொல்வது மட்டுமில்லாமல் எழுத்தாளர் கல்கி போலவே மக்களை அந்த காலத்திற்குத் திரைப்படம் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது.
பாகுபலி பொன்னியின் செல்வன் இரண்டும் வெவ்வேறு கதைக்களம் பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை கதைக்களத்தில் உருவாக்கப்பட்டது ஆனால் பொன்னியின் செல்வன் அப்படி கிடையாது பொன்னியின் செல்வன் உண்மையான கதையைக் கொண்டது.பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு உண்மை சம்பவம் என்றும் அது ஒரு வரலாற்றுக் காவியம் என்றும் பாகுபலியோடு ஒப்பிடஇதில் எதுவும் இல்லை” என்றும் இயக்குனர் மணிரத்தினம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.