இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் . மன்மோகன் சிங் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : சொன்னது சொன்னபடி சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலை..!!
இதுமட்டுமின்றி மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது .
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூடி மன்மோகன் சிங்கிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டிலும் மன்மோகன் சிங் அவர்களுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.