திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மசால் வடை பிரசாதமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தினம் தோறும் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே காணாமப்படும் இதன்காரணமாக பக்தர்கள் மணிக்கணக்கில் நின்று சாமி தரிசனம் செய்வர்.
ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்கதர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நினையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
அன்னதானத்தில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பரிமாறப்பட்டு வரும் நிலையில், சோதனை முயற்சியாக நேற்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பக்தர்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால், பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி அன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் வடை பிரசாதம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .