ITamilTv

நேற்று ஒரே நாளில் 3 முறை உயர்ந்து, இன்று சற்று குறைந்தது தங்கம் விலை!

May 11 Gold Rate

Spread the love

May 11 Gold Rate : நேற்று அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்தது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.

May 11 Gold Rate

மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.

இதையும் படிங்க : யூடியூப் சானல் நிர்வாகி கைது – சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பியவர்

அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.

மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.

நேற்று (10.05.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை காலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் கிராமுக்கு மேலும் ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கு விற்பனை செய்யபட்டது.

தொடர்ந்து 3வது முறையாக மாலையில் கிராமுக்கு 65 உயர்ந்து ஒரு கிராம் 6,770க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று (11.05.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (10.05.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,546-க்கும், ஒரு சவரன் ரூ.44,368-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று (11.05.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.5,529-க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.44,232-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வெள்ளி விலை வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.87.70-க்கும் ஒரு கிலோ ரூ.87,700-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.87.00-க்கும் ஒரு கிலோ ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (May 11 Gold Rate).

இதையும் படிங்க : 10ம் வகுப்புத் போதும்.. இந்திய ரயில்வே துறையில் 4208 காலியிடங்கள்… APPLY NOW


Spread the love
Exit mobile version