MCC கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!

சென்னையை போன்றே பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதி்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அதிரடியாக விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் 4 மாணவர்கள், குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் 67 மாணவர்கள் என மொத்தம் 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மாணவர்களின் பெற்றோர் மீள்வதற்குள் சென்னையில் ஒரே கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்தபோது 22 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 52 ஆக அதிகரித்துள்ளது.

Total
0
Shares
Related Posts