நெல்லை மாவட்டத்தில் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்க முடியாது எனவும் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் கழிவு மேலாண்மை தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
Also Read : பிரான்ஸில் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் – அதிரடி நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்..!!
மருத்துவக் கழிவுகள் உட்பட, உயிரி மருத்துவக்கழிவுகள் அரசின் நடைமுறைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு அகற்றப்படுகிறது.
மருத்துவமனையின் பொதுக் கழிவுகள் சுனேஜ் ஈகோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சேகரித்து வெளியேற்ற ஒப்பந்தம் பெற்றுள்ளது.
மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட உயிரி மருத்துவக் கழிவுகள் இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் பணிபுரியும் இமேஜ் என்ற அமைப்பால் சேகரிக்கப்படுகிறது என திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.