மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள், வழித்தடங்கள், ரயில் நிலையங்கள் அமைத்தல் குறித்து தெளிவான விளக்கத்தினை சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் வழங்கியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சுனன் கூறியதாவது :
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது.
Also Read : வயநாடு நிலச்சரிவு : நிவாரண பணிக்காக ரூ.2 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் பிரபாஸ்..!!
பொதுவாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் என்ற அடிப்படையில் மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்படும் நிலையில், இந்த புதிய வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
திட்டமிட்டபடி சரியாக நடந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பதை இருக்காது . மேலும் நினைத்த இடங்களுக்கு எளியமுறையில் வேகமாகவும் செல்லமுடியும் என அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.