Site icon ITamilTv

MI Vs RR : 200வது விக்கெட்டை பதிவு செய்தார் யுஸ்வேந்திர சாஹல்..!!

MI VS RR

MI VS RR

Spread the love

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 38வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய்  மான்சிங்  இந்தூர்  மைதானத்தில் ( MI VS RR ) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ்  அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக, ரோஹித் சர்மா, இஷான் கிஷண் களமிறங்கினர். 

ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில் எதிர்பாராதவிதமாக ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  2-வது ஓவரில்  இஷான் கிஷண் டக் அவுட் ஆகி வெளியேறினார்.  2 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் மட்டுமே  எடுத்திருந்தது.

இந்நிலையில் சந்தீப்சர்மா வீசிய பந்தில்  சூர்யகுமார் யாதவ்  விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்துக் களமிறங்கிய முகமது நபி அதிரடியாக விளையாடினார். 

 யுஸ்வேந்திர சாஹல் பந்தில் 23 ரன்கள் முகமது நபி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
முகமது நபியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனது 200வது விக்கெட்டை பதிவு செய்தார் யுஸ்வேந்திர சாஹல் .

Also Read : மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..!!!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், திலக் வர்மா மற்றும்  நேஹல் வதேரா  நிதானமாக விளையாடி ஸ்கோரை பொறுமையாக ஏற்றினர்.

ஒரு கட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய  திலக் வர்மா அரைசதம் பூர்த்தி செய்தார்.
எதிர்முனையில் அதிரடியாக விளையாடி வந்த நேஹால் வதேரா 29 பந்துகளில் 49 ரன்கள்  எடுத்து  விக்கெட்டை  பறிகொடுத்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்கள் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சிற்குத் தடுமாற, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தனது  சேஸிங்கை தொடங்கியது,

தொடக்க ஆட்டக்கரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் படலர்  களமிறங்கினர். ஆரம்பமே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால், ஜோஸ் படலர் ஜோடி  6 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் அணியின் பியூஷ் சாவ்லா பந்தில் 25 பந்துகளில் 35 ரன்கள் அடித்திருந்த நிலையில், போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.  அடுத்து, கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் தனது சதத்தை எடுத்தார்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி ( MI VS RR ) 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.  இதன் படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.


Spread the love
Exit mobile version