தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு (board exam) தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான அட்டவணைகள் பள்ளிக்கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான பொது தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்க : https://x.com/ITamilTVNews/status/1744619426081882131?s=20
அதே போல் மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
அதேசமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 10ம் தேதி தேர்வு முடிவுகளும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முடிவடைகிறது. 11ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைகிறது.
12ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் ஆனது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதனிடையே பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வி பேற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு(board exam) தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/district-secretaries-join-in-admk-meeting-today/
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அளித்த பேட்டியில்.
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை. தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றார் போலத்தான் பாராளுமன்ற தேர்தல் தேதி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்என்று கூறினார்.