”தான் இன்றும் பெரியாரின் புத்தகங்களை படித்து வருகிறேன்..” -அமைச்சர் துரைமுருகன் நெகிழச்சி!!

தம்முடைய இளம் தலைமுறை கெட்டுப்போக காரணம் நம்முடைய வரலாற்றை மறந்தது தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் திமுக மாணவரணி சார்பில் மூன்று நாள் கருத்தியல் பயிலரங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில மாணவரணிசெயலாளரும்,காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் தலைமை தாங்கினார்.மேலும் மாணவரணி மாநில நிர்வாகிகள் இரா.ராஜீவ்காந்தி, சி.ஜெரால்டு, எஸ்.மோகன், த.சோழராஜன், ரா.தமிழரசன், பி செந்தில்குமார்,கா. அமுதரசன்,பி.எம்.ஆனந்தி, கா.பொன் ராஜ், வி.ஜி.கோகுல்.பூர்னசங்கீதா.ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கருத்தியியல் பயிலரங்கம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள். துணை அமைப்பாளர்களுக்கான பயிலரங்க கட்டத்தை திமுகபொதுச் செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான
துரைமுருகன் துவக்கி வைத்து பேசியதாவது:

இந்த படிவத்தை அனை வரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களைபோல் மாணவனாக இருந்து வந்தவன் தான். இன்று இருப்பதுபோல் அன்று வசதிகள் கிடையாது. திமுகவே மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். மாணவரணி தான் திமுகவுக்கு பக்க பலமாக இருந்தது.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தான் கட்சியின் கொள்கைகளை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும். தம்முடைய இளம் தலைமுறை கெட்டுப்போக காரணம் நம்முடைய வரலாற்றை மறந்தது தான், பெரியார் இல்லை என்றால் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து இருக்கமுடியாது.

அவரால் தான் இன்று எல்லோரும் படிக்க முடிகிறது. தலைவர்களை புகழ்வது தவறல்ல முதலில் படியுங்கள். தான் இன்றும் பெரியாரின் புத்தகங்களை படித்து வருகிறேன்.அணிகளுக்கு வருவது பெரிதல்ல கொள்ளைகளை புரிந்துக்கொள்ளவேண்டும். எதைபற்றி பேசினாலும் அதை பற்றி புரிந்துக் கொள்பவர் மாணவர்கள் தான், இவ்வாறு அவர்பேசினார்.

தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி. வாலாசா வல்லவன்,மா. உமாபதி, மதிவதனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் 8 மாவட்டங்களின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர்மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி.வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி,ஆம்பூர் எம்எல்ஏ வில்வ நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Total
0
Shares
Related Posts