”ஐ.டி. ரெய்டு ஒன்றும் புதிதல்ல..” செந்தில் பாலாஜி அதிரடி!!

சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரிச் சோதனையை எதிர்கொண்டோம். வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, பாதுகாப்பைக் கேட்காமலேயே தமிழக காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு, முழு விவரங்களுடன் விளக்கம் அளிக்கிறேன். சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரிச் சோதனயை எதிர்கொண்டோம். வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்றும், வருமான வரிச்சோதனை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு வரும் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

சோதனை நடைபெறும் இடங்களில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 2006ஆம் ஆண்டு முதல்,

இன்று வரை ஒரு சதுர அடி நிலத்தைக் கூட நானோ எனது குடும்பத்தினரோ பதிவு செய்யவில்லை. நண்பர் வீட்டில், கேட்டை திறப்பதற்கு முன்பே, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர். இது ஏன் என்றும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Total
0
Shares
Related Posts