Site icon ITamilTv

இந்தி திணிப்பு :அமித்ஷாவின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!!

Spread the love

ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(udhayanidhi stalin) தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும் என குறிப்பிட்டு இருந்தார்.இதற்கு முதலமைச்சர் மற்றும் திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதில்,இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.

தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language” என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version