தமிழகத்தில் 3 அமைச்சர்களின் நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தொழில்துறை அமைச்சரின் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, உழவர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வசம் சென்றிருக்கிறது.