இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக அழகி போட்டி..!

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் “MISS WORLD” எனப்படும் உலக அழகி போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. கடைசியாக இந்தியாவில் 1996-ல் பெங்களூருவில் உலக அழகி போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான உலக அழகி (miss world) போட்டி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடக்கவுள்ளதாக உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜூலியா மோர்லி, இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஒரு மாதத்துக்கு நடக்க இருக்கும் இந்த போட்டியில், சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரீட்டா ஃபரியா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா ஆகியோர் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர். இந்நிலையில், கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு மானுஷி சில்லார் உலக அழகி பட்டம் வென்றார். இதனால், மானுஷி சில்லார் உலக அழகி பட்டம் பெற்ற 6வது இந்தியர் ஆனார்.

தற்போது, போலந்தைச் சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். இதையடுத்து, இந்தியாவில் நடக்க இருக்கும் உலக அழகி போட்டி குறித்து அவர் கூறுகையில், “உலகில் மிகச் சிறந்த விருந்தோம்பல் கலாசாரம் உடைய நாடு இந்தியா, உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.

Total
0
Shares
Related Posts