Site icon itamiltv.com

தவெக close.. டிரெண்ட் ரியாக்‌ஷனை மீண்டும் செய்து காட்டிய முதல்வர்!

சட்டப்பேரவை தேர்தல் கடந்த வியாழக்கிழமை முடிந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வு எடுக்க குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவரை பார்த்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அணுகி பேசிக் கொண்டு, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அந்த நேரத்தில், தவெக குறித்து பேசிக்கொண்டிருந்த சிலர், முதலமைச்சரிடம் அவரது பிரபலமான ‘சிக்னேச்சர்’ கைசைகையை மீண்டும் செய்யச் சொல்லி மகிழ்ந்தனர்.

முன்னதாக, காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முடிந்தபோது அவர் காட்டிய இந்த சைகை சமூக வலைதளங்களில் பெரிதும் பரவி, தனித்துவமான அடையாளமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் இரு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக வெற்றிவாய்ப்பு குறித்து அவர் கட்டைவிரலை உயர்த்தி நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

Exit mobile version