பிரதமர் ‘மோடிக்கு இன்டர்நேஷனல் நடிகர்’ என்ற பட்டம் கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் கூறியதாவது :
மோடி அரசு அமைந்த நாளில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டு வருகிறோம். 500,1000 ரூபாய் நோட்டு செல்லாத என்று அறிவித்தபோது அதை நாம் கடுமையாக விமர்சித்தோம். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று பேசினோம். இவர்களிடம் இருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என பேசினோம்.
Also Read : பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைத்த தமிழ்நாடு பால்வளத்துறை..!!
பல்வேறு மாநிலங்களில் மாநாடு நடத்தினோம். ஒரு புறம் மனுதர்ம சட்டம், மறுபுறம் அரசமைப்புச் சட்டம், ஒடுக்கப்பட்டவர் எப்பொழுதும் ஒடுக்க பட்டவர்களா இருக்க மாட்டார்கள். ஆளுபவர்கள் எப்போதும் ஆளுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
சமூக கலாச்சாரம், ஆணவ கொலைகள் என அனைத்திலும் மனுதர்ம சட்டம் தான். சமூக தளத்தில் அரசியமைப்பு சட்ட முறை இல்லை என்றார். நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழ் திரையுலகில் அளிக்கப்பட்ட பட்டம். பிரதமர் மோடிக்கு இன்டர்நேஷனல் நடிகர் போன்று ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.