ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், Money Heist முகமூடியை அணிந்த நபர் ஒருவர், பணநோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் வெளியாகி வைரல் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
பிரபல OTT தளமான netflix இல் வெளியான கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான Money Heist வெப் சீரிஸ் தொடர் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், Money Heist முகமூடியை அணிந்த மர்ம நபர் ஒருவர், நாடு ரோட்டில் பணநோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன .
மக்கள் அதிகம் பயணிக்கும் மாளவியா நகரில் உள்ள முக்கிய சாலையில் உள்ள கௌரவ் டவருக்கு வெளியே காரை நிறுத்திவைத்துவிட்டு, அதன்மீது ஏறிநின்று அங்கிருந்த கூட்டத்தினரை நோக்கி அந்த நபர் வீசிய ₹10 மற்றும் ₹20 ரூபாய் நோட்டுக்களை, அங்கிருந்த மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு எடுத்துச்சென்றனர் .
இந்த காட்சிகள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.