குன்னூர் அருகே கடந்த 2021ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்(bipin rawat) உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி எனும் பகுதியில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க IAF Mi 17 V5 ரக ஹெலிகாப்டர் முப்படைகளின் தளபதி உள்ளிட்ட 14 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவு தினமான டிசம்பர் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது.