தொடர் விடுமுறை: சொந்த ஊருக்கு ஒரே நாளில் படையெடுத்த மக்கள் எத்தனை பேர் தெரியுமா?

ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வெளி இடங்களில் தங்கி இருந்து வேலை செய்யும் மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில், அரசு பேருந்துகளில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் வெளியூர் பயணம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு பேருந்து உட்பட மொத்தம் 5 ஆயிரத்து 422 அரசு பேருந்துகளில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் சென்னையில் இருந்து நேற்று சென்றுள்ளனர்.
ஆயுத பூஜையையொட்டி வட மாவட்டம், திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்ற நிலையில் மேலும், 15,000 பேர் சொந்த ஊருக்கு சென்று திரும்ப முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts