நடிகர் அர்ஜூனின் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கும், பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் காதல் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா 2013ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை” திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ‘அதாங்கப்பட்டது மகாஜனங்களே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கடந்த 2021ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கினார் . அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி.

அந்த சமயத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டவே அவர்களின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.