பல நாடுகளை பாரபட்சமின்றி தாக்கியுள்ள குரங்கு அம்மை வைரஸ் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை அறிவித்துள்ளது.
ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்ரிக்காவில் 2024ல் மட்டும், குரங்கு அம்மையால் இதுவரை 14,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
Also Read : கடைசி வரிசை இருக்கையில் ராகுல் காந்தி – கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை..!!
இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் தற்போது வரை தாக்காமல் இருக்கும் நிலையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய பொதுசுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் :
இந்த குரங்கு அம்மை வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறி தோல் அரிப்பு, சீழ் வழிதல். அதனுடன் 2-4 வாரங்கள் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு அடைதல், நிணநீர் கணுக்கள் வீக்கம் அடையலாம்.