இந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் MS DHONI சிறிய காயத்துடன் களமிறங்கினார். ஆனால் தற்பொழுது இந்த காயத்திற்காக டோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று 5வது முறையாக IPL கோப்பையை வென்றுள்ளது.
ஆனால் சென்னை அணியின் கேப்டன் ms dhoni ஐபிஎல் தொடக்கத்தில் இருந்து தனது மூட்டியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வந்தார். இதானல் அவர் பின் வரிசையில் இறங்கி விளையாடினார்.
அப்போது அவருக்கு ரன்கள் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய டோனி, எனது வேலை பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிப்பது தான்..என்னை அதிக வேலை செய்ய விடாதீர்கள் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இறுதி போட்டியில் கூட அவர் காயம் காரணமாக சிரமப்பட்டு வந்த அவர் காலில் எப்பொழுதும் அவர் knee cap அணிந்து கொண்டு போட்டிகளை எதிர்கொண்டார்.
மேலும் டோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,இது என்னுடைய ஓய்வை அறிவிக்க சரியான நேரம். ஆனால் நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் காண்பிக்கும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் இன்னும் ஒரு சீசன் விளையாட முடிவுசெய்துள்ளேன்.
தற்போது தேங்க் யூ சோ மச் என்று சொல்லி செல்வது எளிதான ஒன்று தான். ஆனால் அடுத்த 9 மாதங்கள் பயிற்சி செய்து மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது என்பது மிகவும் கஷ்டம்.
அவை அனைத்தும் எனது உடற்தகுதியிலேயே இருக்கிறது. இருப்பினும் 6-7 மாதங்கள் அவகாசம் இருக்கிறது. எனது அணியினருக்கு நான் அளிக்கும் கிப்ட் நான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவது தான். ஆனால் அது எனக்கு எளிதாக இருக்காது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், காயம் காரணமாக ms dhoni மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட உள்ளதாகவும்,அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளபட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.