விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விக்கெட் கீப்பர், பேட்டரான ராபின் மின்ஸை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது .
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன . இதில் 367 இந்திய வீரர்களும் 210 வெளிநாட்டு வீரர்களும் தேர்வாகி உள்ளனர்.
10 அணிகளும் 70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து, அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.
Also Read : புதுச்சேரியில் கனமழையை எதிர்கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு..!!
இந்நிலையில் நேற்றை போலவே இன்றும் அனைத்து அணிகளும் வீரர்களை போட்டிபோடுகின்து ஏலத்தில் எடுத்து வருகிறது . அந்தவகையில் தற்போது விக்கெட் கீப்பர், பேட்டரான ராபின் மின்ஸை மும்பை அணி 65 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது .
கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 3.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், விபத்தில் காயமடைந்ததால் 2024 தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாமல் போனது. ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போன முதல் பழங்குடியின வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது