”ஆளுநரின் பருப்புகள் வேகாது”-கொட்டி தீர்த்த முரசொலி..அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஆளுநரின் பருப்பு இனி வேகாது என்று முரசொலி நாளிதழில் கடுமையாக விமர்சித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் முதலீடுகளை இருக்கும் வகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில், ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆளுநர் முதலமைச்சர் சுற்று பயணம் குறித்து விமர்சித்து இருந்தார். நாம் பேசுவதாலோ, வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாலோ முதலீடுகளை ஈர்க்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

ஆளுநரின் இந்த விமர்சனத்திற்கு திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு பக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பெய ரில் ஒரு ‘சுகஜீவி” நியமிக்கப்பட்டு அவர் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி இத்தகையதுதான்! ஆளுநருக்குத்தான் வேலையில்லை என்றால் தங்களுக்கு தரப்பட்ட பணி யைச் செய்து கொண்டிருக்கும் துணை வேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு நாம் குறிப்பிட்ட ‘மேய்ற மாட்டை நக்கிடும் மாடு’- வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

கொளுத்தும் வெயிலின் அனலால் தமிழ்நாட்டு மக்களெல்லாம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது, குளு குளு வாசஸ்தலத்தைத் தேடி ஆளுநர் ரவி ஊட்டியில் ‘டேரா’ போட்டுள்ளார்! “ஊரான் வீட்டு நெய்யேபொண்டாட்டி கையே…”பழமொழிக்கேற்ப என் எனும் தமிழ்நாட்டு அரசின் செலவில் மனிதர் சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்!”சுக்ரயோகம்’ என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியா வின் ஆளுநர்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநர் ரவியையே எடுத்துக் கொள்ளுங்களேன்!

அவர் சென்னை கிண்டியில் வசிக்கும் ராஜ்பவன் 156 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இதுதவிர, ஊட்டி யிலும் 86.72 ஏக்கரில் ராஜ்பவன் அமைந்துள்ளது!

சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலா? ஆளுநர் சுகவாசம் தேடி அங்கே புறப்பட்டு விடுவார்! அவருக் கென்ன? யார் கும்பி எரிந்தால் என்ன, குடல் கருகினால் என்ன, அவருக்கு தேவை ‘குளுகுளு’ வாசம்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத் துக்காளாகினால் என்ன? தமிழ்நாட்டு பயணிகள் நிலை என்ன ஆனால் என்ன? அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப் பட்டதாகவேத் தெரியவில்லை!

கடந்த ஜூன் 2-ந் தேதி இரவு நாட் டையே குலுக்கிய ரயில் விபத்து ஒரிசா வில் நடந்துள்ளது! சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில். பெங்க ளூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி அந்தப் பகுதிஎங்கும் மரண ஓலம் கேட்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்
கின்றன. நாடே உறைந்துள்ளது!

அதிர்ச்சியில் தமிழ்நாட்டு முதல்வர் செய்தி கேட்டு துடித்து உடனடியாக விபத்து பகுதிக்கு அமைச்சர்களை அனுப்புகிறார்.நிவாரணப் பணிகள் எப்படி நடக்கின் றன என்பதை வினாடிக்கு வினாடி ‘வார் ரூம்’ மோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்கிறார்!

ஒரிசா முதல்வர் காலையில் விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறார்: ஏன் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் விரைகின்றனர்! நிமிடத்துக்கு நிமிடம் விபத்தில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி செய்திகள் வருகின்றன! படுகாயமுற்று கதறி அழுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது

தமிழ்நாட்டில் கலைஞரின் நூற் றாண்டு விழா தொடக்கத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட எண்ணி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடு முழுவதும் நடந்து முடிந்திருந்த நிலையிலும், அவைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக கழகத் தலைவர் தளபதி அறிவிக்கிறார்! ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் திட்டமிட்டபடி. நடந்த எது குறித்தும் கவலைப்படாது.

ஜூன் 3-ந் தேதி குளுகுளு வாசஸ்தலத்திற்கு பயணப் பட்டு. அங்கு துணை வேந்தர்களை அழைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு அறிவாற்றலைக் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அழைத்து, தனது காட்டுவதாக நினைத்து அறிவிலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்!

Your excellancy. அதாவது மேன்மை பொருந்திய ஆளுநர் என்றெல்லாம் ஆளுநர் அழைக்கப்பட்ட காலத்தைஎண்ணிப் பாருங்கள்! அந்த ஆளுநர் கள் அரசியல் சட்டம் தங்களுக்குத் தந்த | பணிகளுக்குள் சுழன்றவர்கள்! எல்லை மீறாதவர்கள்!இன்றைய தமிழ்நாட்டு ஆளுநர் ரவி யைப் போல எத்தனை சூடுபட்டாலும் ‘திருந்தாத ஜென்மங்கள் அல்ல!’ – என்ன பேசுகிறோம்; இதன் விளைவுகள் எங்கே போய் முடியும்? – என்பதை எல்லாம் சிந்திக்காது செயல்படுவது மட்டுமின்றி,

தனக்குத் தோன்றியதை எல்லாம் பேசி, வகிக்கும் பதவியின் பெருமையை சீரழித்தவர்கள் அல்ல! தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர் Your excellancy. அதாவது மேன்மை பொருந்திய ஆளுநர் என்றெல்லாம் ஆளுநர் அழைக்கப்பட்ட காலத்தைஎண்ணிப் பாருங்கள்! அந்த ஆளுநர் கள் அரசியல் சட்டம் தங்களுக்குத் தந்த | பணிகளுக்குள் சுழன்றவர்கள்! எல்லை மீறாதவர்கள்!

இன்றைய தமிழ்நாட்டு ஆளுநர் ரவி யைப் போல எத்தனை சூடுபட்டாலும் ‘திருந்தாத ஜென்மங்கள் அல்ல!’ – என்ன பேசுகிறோம்; இதன் விளைவுகள் எங்கே போய் முடியும்? – என்பதை எல்லாம் சிந்திக்காது செயல்படுவது மட்டுமின்றி, தனக்குத் தோன்றியதை எல்லாம் பேசி, வகிக்கும் பதவியின் பெருமையை சீரழித்தவர்கள் அல்ல!

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டு வதாக நினைத்து. தான் ஒரு ‘Half boiled”, அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்!ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து. துணைவேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத
தொழில்முதலீடுகளைப் பற்றி பேசி தனது முதிர்ச் -சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார்! “நாம் கேட்பதாலோ,

வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவ தாலோ முதலீடுகள் வராது” – என்று பேசி அவலை நினைத்து உரலை இடித்துள்ளார்! ஆம்: தமிழ்நாடு முதல்வரை நினைத்து பிரதமர் மோடியை இடித்துள்ளார்!

“PM.Modi meets prominent Austra ஆளுநர் ரவி பல நேரங்களில், தான் என்ன பேசுகிறோம். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ‘ஆப்பசைத்த குரங்காய்’ அகப்பட்டுக் கொள்கிறார்! தன்னால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள், தான் என்ன பேசி னாலும் அதனை ஏற்றுக் கொள்ளுவார் கள் என்ற எண்ணத்தில் ரவி அவர்களி டையே பேசினாலும், அதில் காணப்படும் அறிவிலித்தனத்தை அங்கு வந்த துணைவேந்தர்களில் சிலர் உணர்ந்தே இருப்பர்!

விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது’ – எனப் பழமொழி கூறுவார்களே, அதுபோல வேண்டாத விவகாரங்களில் தலை யிட்டு ‘சனியனை’ விலைகொடுத்து வாங்குவதில் ஆளுநர் ரவிக்கு பல நேரங்களில் ஒரு அற்ப சந்தோசம்! சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகா ரங்களில் தலையிட்டு பல நேரங்களில் வாலறுந்த நரியாக ஆனாலும் அவர் பாடம் பெறுவதில்லை!

மீண்டும் மீண்டும் வாலை நுழைத்து ஆழம்பார்க்கிறார்! அவருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்; இது தமிழ்நாடு! ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! இங்கு இவரது பருப்புகள் வேகாது! என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts