இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தலைமைக் காவலர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் எம் கே புரம் பகுதியில் சொந்தமாக நகை கடை நடத்தி வருகிறார். மேலும் இந்து மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் எம் கே புரம் பகுதியில் உள்ள தனது நகை கடைக்கு இருசக்க வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மணிகண்டனின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு தலைமை காவலராக பணியாற்றும் ஹரிஹர பாபுவின் மனைவிக்கும் உயிரிழந்த மணிகண்டனுக்கும் தகாத உறவு இருப்பதாக அவர் கருதியதால், ஹரிஹர பாபு நீதிமன்றத்தில் காவல் பணிக்கு சென்ற போது ஏற்பட்ட பழக்கத்தில் கூலி படையினரை ஏவி விட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதை எடுத்து கொலைக்கு மூளையாக செயல்பட்ட தலைமை காவலர் ஹரிஹர பாபு கூலிப்படையாக செயல்பட்டு மணிகண்டனை கொலை செய்த தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஹைதர் அலி (வயது 24), ஜெய்ஹிந்த்புரம பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் வயது 26,
ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற பல்லு கார்த்திக் வயது 26,ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த அழகு பாண்டி வயது 26,மணிகண்டன் வயது 28, புறா பாண்டி என்ற முத்து பாண்டி, ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதில் தப்பி ஓடிய அஜித் என்ற க
குட்ட அஜித், திருச்செந்தூரை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.