Union Joint Minister shoba : மத்திய இணை மந்திரி ஷோபாவின் உண்மைக்கு புறம்பான பொறுப்பற்ற பேச்சு அமைதிக்கும், மக்களின் நல்லிணக்கத்திற்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
பெங்களூருவில் இயங்கி வரும் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகத்தில் கடந்த கடந்த மார்ச் 1-ந்தேதி பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ(25) ஆகியோர் மற்றும் உணவகத்தினுள் இருந்த 7 வாடிக்கையாளர்களும் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக மத்திய இணை மந்திரி சோபா கருத்து கூறும்போது, “தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய இணை மந்திரி ஷோபாவின் இந்த பொறுப்பற்ற பேச்சு அமைதிக்கும், மக்களின் நல்லிணக்கத்திற்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
இதையும் படிங்க : ஸ்டாலின் அறிவித்த இந்த முரசொலி யார்..?
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..
“மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல இணை மந்திரி ஷோபா Union Joint Minister shoba கரந்த்லாஜே பெங்களூரு, ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக,
உண்மைக்கு மாறான தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செய்தியை வெளியிட்டுள்ளார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொறுப்பற்ற பேச்சு அமைதிக்கும், மக்களின் நல்லிணக்கத்திற்கும் எதிரானது. மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட இக்கருத்து, அரசியல் சட்ட மாண்புகளுக்கு எதிரானது. கடும் கண்டனத்திற்குரியது.
இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்து, அந்த மந்திரி மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : பாஜக-தமாகா தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை – ஜி.கே.வாசன்