எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (16.08.24) வெள்ளிக்கிழமை புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், SSLV -D3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! – சீமான்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது..
“புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட EOS 08 செயற்கைக்கோளுடன் கூடிய SSLV -D3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விண்வெளி உலகில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்து அண்டை நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.