Mother’s Day Wishes : அன்னையர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது..
“அன்பின் அடையாளமாக, அனைத்து உறவுகளுக்கும் அடிப்படையாக, ஆயுள் முழுவதும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே…
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே”
என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளுக்கு ஏற்ப சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கும் அன்னையர்கள் அனைவரும் நலமின்றி கிடைத்த வாமாக நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
தாய்மையின் பெருமையைப் போற்றிக் கொண்டாடும் இந்நாளில் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும்,
அவர் கொண்டுவந்த நாடு போற்றும் நல்லபல திட்டங்களையும் நினைவு கொள்வதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம் (Mother’s Day Wishes)
அன்பு, அரவணைப்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும் தன்னலம் கருதாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் யாழும் தெய்வங்களா அன்னையர்கள் அனைவரின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை