கரூர் மாவட்டத்தில் அரசியல் சூழல் சூடு பிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கரூர் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், அதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் பொறுப்பு” என்று தெரிவித்தார்.
மேலும், கரூர் மாவட்ட வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்த அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம், புதிய சட்டக் கல்லூரி மற்றும் மகளிர் கலைக் கல்லூரி தொடங்குவது உள்ளிட்டவை குறித்து கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவித்தார்.
கோயில் இனாம் நிலம் தொடர்பான விவகாரத்தில் தன்னைக் குற்றம் சாட்டுவது தவறானது என்றும், பழைய வழக்குகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதனுடன், கடந்த காலங்களில் தன்னை தாக்க முயற்சிகள் நடந்ததாகவும், தனது மீது பல முறை தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை தடுக்க முயற்சிகள் நடக்கின்றன என்றும், தன்னுடைய வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்காக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

