திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தொல்லியல் சின்னம் மீது மர்ம நபர்கள் பெயிண்ட் அடித்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தொல்லியல் சின்னமான சமணர் குகையில் பெயிண்ட் அடித்து சேதப்படுத்தியதாக மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
Also Read : “இபிஎஸ் ஒரு அரசியல் வியாபாரி” – அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!!
மலை மீது உள்ள தர்காவில் ஆடு பலியிடுவது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் – இந்து அமைப்புகள் இடையே சமீபத்தில் கருத்து மோதல் நிலவி வந்த நிலையில், அங்கு இருக்கும் தொல்லியல் சின்னமான சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில் பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அலுவலர் போலீசில் புகார் கொடுத்தவர்.
இதையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த அப்பகுதி காவல்துறையினர் இது தொடர்பாக மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.