தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்துக்கு கோலாகலமாக தொடங்கி உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு முதல் பயணமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .
அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் இலங்கைக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கப்பலில் பயணம் செய்ய பல்வேறு தேதிகளில் பலரும் முன்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கப்பலுக்கு போதுமான பயணிகள் இல்லை எனக்கூறி இந்த கப்பல் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுவதுவதாக அறிவிக்கப்பட்டது .
Also Read : தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை – பொதுசுகாதாரத்துறை
இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ஆகஸ்ட் 16 இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது .
இதையடுத்து சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் பயணிக்க, சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் அவர்களை அழைத்துக்கொண்டு சிவகங்கை கப்பல் இலங்கைக்கு புறப்பட்டுள்ளது .
இந்த கப்பலில் சாதாரண வகுப்பு கட்டணமாக ஒருவருக்கு ₹5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணமாக 7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.