தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, நிகழ்ச்சி ஒன்றில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான அக்கினேனி (akkineni) நாகேஸ்வர ராவின் பெயரை குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதைக் குறைவாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் பாலகிருஷ்ணா முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதனை தூக்கி எறிந்தார். பின்பு, மற்றொரு நிகழ்ச்சியில், அவருடன் புகைப்படம் எடுக்க குழந்தையுடன் சென்ற ரசிகர் ஒருவரை அந்த குழந்தையை விளையாட்டாக அடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்படி கூறினார். இது போன்று பாலகிருஷ்ணா செய்த பல நிகழ்வுகளால் சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், “வீர சிம்ஹா ரெட்டி” படத்தின் சக்சஸ் மீட்டிங்கில், கையில் மது கோப்பையுடன் பாலகிருஷ்ணா, நடிகை ஹனிரோஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் எடுத்தும் சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், தற்போது அந்த சக்சஸ் மீட்டிங்ன் போது பேசிய அவரின் பேச்சு குறிப்பிட்ட திரை பிரபலங்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில், பேசியுள்ள பாலகிருஷ்ணா, தெலுங்கு திரை உலகில் பழம்பெரும் நடிகரான அக்கினேனி (akkineni) நாகேஸ்வர ராவின் பெயரை குறிப்பிட்டு பேச்சு வழக்கில் மரியாதை குறைவாக பேசியிருக்கிறார்.
Akkineni Tokkineni 🤣🤣🤣 pic.twitter.com/pvVp4cjZKC
— ѶᏋຖӄค₮ (@mega__cpr) January 22, 2023
இதுகுறித்த வீடியோவில் பாலகிருஷ்ணா, தனது முன்னோர்கள் மற்றும் என்டி ராமராவ் பற்றி பேசியிருக்கிறார். மேலும், தனது சமகாலத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசிய ‘அக்கினேனி, தோக்கினேனி’ என பேச்சு வழக்கில் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் அக்கினேனி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, பாலகிருஷ்ணாவின் பேச்சுக்கு அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி
கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இந்த சர்ச்சை தொடர்பாக அக்கினேனி குடும்பத்தினருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், பாலகிருஷ்ணா தனது கருத்துக்களுக்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.